“SMART Goal” வழிமுறை

புத்தாண்டு பொறந்தா கோவில்ல கூட்டம் இருக்குதோ இல்லையோ , ஜிம்ல கூட்டம் நிரம்பி வழியும். ”உடம்ப ஏத்தணும்” அப்படினு சொல்லிட்டு 3-4 நாள் ஜிம்முக்கு ஆர்வமுடன் போக வேண்டியது, அப்புறம் அடுத்த வருசம் இதே மாதிரி பண்ண வேண்டியது. இது போல, நிறைய விசயம் நம்மளுக்கும் நடந்திருக்கும். ஒரு விசயத்த ஆர்வமுடன் செய்வோம், அப்புறம் ரஜினி அரசியலுக்கு வர்ற கதையா இழுத்துகிட்டு போயிடும். இத எப்படி தடுக்குறது . இருக்கு.வழி இருக்கு. அதான் “SMART Goal” வழிமுறை. இதுல, S – Specific, M-Measurable, A- Achievable , R – Relevant and T – Time Bound , எல்லா வார்த்தைகளிம் இருக்குற முதல் எழுத்துக்களை சேர்த்து உருவானது தான் “SMART Goal” வழிமுறை. உதாரணதிற்கு நம்ம மோட்டொ வெயிட்ட குறைக்கணும். இத எப்படி மேல இருக்குற SMART குறிக்கோள செட்பண்ணும்னு பாக்கலாம்.

#S-Specific- என்ன செய்யனும்னுகிற தெளிவு. பொத்தாம் பொதுவா வெயிட்ட குறைக்கணும்னு இல்லாம, 2 கிலோ, 10 கிலோ இப்படி , Specific க்கா இருக்கணும்.

#M-Measurable – நாம என்ன செஞ்சிருக்கோம்னு அளவு எடுத்து பாக்கணும். இது நாம் சரியான திசையில போறமானு சொல்லிடும். ”என்னாடா ஜிம்முக்கு வெயிட்ட குறைக்கணும் போனியே , என்ன ஆச்சு” அப்படினு நம்ம கேர்ள் பிரண்ட்(?!) கேட்டா, “2 மாசமா போறேன், 2 கிலோ குறைச்சு இருக்கேன்” அப்படினு சொல்லணும்.

#A- Achievable – நம்மளோட குறிக்கோள் குறிப்பிட்ட டையத்துகுள்ள நடைமுறை படுத்துற மாதிரி இருக்கணும். ஜிம்மே இல்லாத எடத்துல இருந்துகிட்டு, வழக்காமா சாப்பிடுற எல்லா சாப்பாட்டையும் சாப்டுகிட்டு, 10 நாள்ல 10 கிலோ குறைக்கணும்னா நடக்காது. சோ, நம்மளோட மோட்டோ ரியல்ஸ்டிகா இருக்கணும்.

#R – Relevant /Realistic– எதனால நாம இத பண்ணனும். பி.எம்.ஐ 25க்கும் மேல இருக்கு. அதனால வெயிட்ட குறைக்கணும். மூட்டுவலி , அதனால வெயிட்ட குறைக்கணும். இது மாதிரி , நாம் ஏன் இத செய்யணும், அதுக்கு பின்னாடி இருக்க Intention என்ன.

#T – Time Bound – இது ரொம்ப முக்கியமானது. எத்தண நாளுக்குள்ள நாம நெனச்சத செய்யணும். 10 கிலோ வெயிட்ட 4 நாள்ல குறைக்க முடியாது. 6 மாசம் இல்ல ஒரு வருசம் கூட தேவைப்படும். இது மாதிரி, ஒரு டைம் பிரேம் வைச்சுக்கணும்.

இதே “SMART” வழிமுறைய உங்கள் குறிக்கோளுக்கு ஏத்த மாதிரி மாத்திகோங்க.

இந்த புத்தாண்டு உங்கள் கனவுகளையும், குறிக்கோள்களையும் நிறைவேற்றி ,இல்லங்களில் மகிழ்ச்சி பெருகட்டும்.

Leave a comment