மதங்களும்- பி.கே என்கிற குடிகாரனும்

ஹிந்தி மொழியில் பிக்கே என்றால் “குடித்தல்” என்று பொருள். குடிமகன்களை பொதுவாக ”பிக்கே ஹே கியா” (குடித்திருக்கிறாயா?) எனக் கேட்பார்கள். ஆனால், பி.கே என்ற திரைப்படம் நம்மை ஆண்டாண்டு காலமாய் பீடித்திருக்கும் மதம் என்ற அதிகார,அறியாமை போதையை எடுத்துக் காட்டியிருக்கும் ஒர் உன்னத திரைப்படம். இவ்வளவு நகைச்சுவையாக வாழை பழத்தில் ஊசி ஏற்றுவது போல் மத அடிப்படைவாதத்தை கேள்வி கேட்டிருக்கும் முதல் படம் ( ”ஒ மை காட்” படம் இதிலிருந்து முற்றிலும் வேறானது) .எளிய முறையில்…