ஊக்கப்படுத்தும் பொன்மொழிகள்

மாற்றம் எப்போது வேண்டுமானலும், எப்படி வேண்டுமானலும் நிகழலாம்.நாம் தான் மாறத் தாயாராக இருக்க வேண்டும். சில வேளைகளில் ,  சில சொற்களோ, சில மேற்கோள்களோ, சில வாசகங்களோ கூட மாற்றத்தை எற்படுத்தலாம், அப்படிப்பட்ட நம்மை ஊக்கப்படுத்தும் , நம்பிக்கையை விதைக்கும், மனவலிமையை உறுதியாக்கும் அறிஞர்களின் சில சொற்கள் நம்மை நாமே செம்மைப்படுத்த தொகுக்கப் பட்டுள்ளது.  

  1. மனிதனை முழுமையாக்குபவை அவனது எண்ணங்களே ; அவன் என்ன எண்ணுகிறானோ, அதுபோலவே ஆகிறான். – அண்ணல் காந்தியடிகள்

  2. வாழ்வில் நமக்கு முன் இரண்டு விருப்பங்கள் இருக்கின்றன ; முதலாவது , இருப்பதை அப்படியே எற்றுக் கொள்வது , இரண்டாவது , நாம் விரும்பிய வாழ்க்கைக்கு தேவையானவற்றை செய்வது. – டென்னில் வெயிட்லி

  3. உலகை மாற்ற வேண்டுமா, முதலில் நீங்கள் மாறுங்கள், உலகம் தனாக மாறிவிடும். – நார்மன் வின்செண்ட் பால்

  4. வாழ்வில் தவறே செய்யாதவன், எதையுமே புதிதாக முயற்ச்சி செய்யாதவனாகதான் இருப்பான் – தியோடர் ரூஸ்வெல்ட்

  5. பணிகளுக்காக உங்கள் குடும்பத்தை எப்போதும் மறந்து விடாதீர்கள் –வால்ட் டிஸ்னி

  6. உலகில் இறுதிவரை வாழப்போவது , வலிமையான உயினினமும் இல்லை,மாறாக , மிகவும் புத்திசாலித்தனமான உயிரினமும் இல்லை. எது சூழ்நிலைக்கு எற்றவாறு தன்னை மாற்றிக் கொள்கிறதோ, அதுவே இறுதிவரை இப்புவியில் வாழும் – சார்லஸ் டார்வின்

  7. நீங்கள் தான் உங்கள் வாழ்க்கை வரலாற்றை எழுத வேண்டும், அடுத்தவர்களை எழுத விட்டு விடாதீர்கள் –ஹார்லி டேவிட்சன்

  8. உறுதியான மனவலிமை கொண்டவனை எதுவும் தடுக்க இயாலாது, உறுதியற்ற மனவலிமை கொண்டவனுக்கு எதுவும் கிடைக்காது –தாமஸ் ஜெபர்சன்

  9. மாற்றத்தை விரும்பாதவேரே இவ்வுலகில் மிகவும் அறிவாளியும், அடி முட்டாளுமாவர் – கன்பூசியஸ்

  10. குறிக்கோள் இல்லாத செயல் என்பது “பகல் கனவு”, செயல் இல்லாத குறிக்கோள் என்பது “ இரவுக் கனவு”. – ஜப்பானிய பொன்மொழி

  11. ஆயிரம் மைல்தொலைவுப் பயணம் முதல் சிறு அடியிலேயே தொடங்குகிறது – லாவ் சு

  12. அறிவு என்பது அதைப் பயன் படுத்துவதிலும், விருப்பம் என்பது செயலிலும் மட்டுமே இருக்க வேண்டும். – ஜோகன் வால்கங்க் வான் கோத்தே

  13. தோல்வி எனபது கடினமானது, அனால், எதையுமே முயற்சிக்காமல் இருப்பது தோல்வியை விட மோசமானது – தியோடர் ருஸ்வேல்ட்

  14. உங்களை நிர்வகிக்க அறிவையும், மற்றவர்களை நிர்வகிக்க அன்பையும் பயன்படுத்துங்கள். – எலேனர் ரூஸ்வேல்ட்

  15. உங்கள் பலவீனத்தை உங்களுடனும், உங்கள் பலத்தை மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள் –ராபர்ட் லூயில் ஸ்டீவன்சன்.

  16. வீழ்வது தவறல்ல, வீழ்ந்தே கிடப்பதே மாபெரும் தவறு – பழமொழி

Leave a comment