லிங்கா – கலோனல் பென்னிகுயிக்

சிறுவயதில் யானையைப் பார்த்தாலே பயம், இன்பம், களிப்பு என ஒர் இனம் புரியாத உணர்வுகள் உள்ளத்தில் எற்ப்படும் . நாம் வளர வளர யானையின் மீதான அந்த பிரமிப்பு குறைந்து கொண்ட்டே வரும், சிறு வயதில் இருந்த அந்தக் குதூகலம் இருக்காது. ரஜினியின் சமீபத்திய வரவான லிங்காவும் அந்த வகையைச் சேர்ந்தது தான். படத்தில் என்ன சொல்லியிருக்கிறார்கள் எனபதை பார்க்கும் முன் கதைக் கருவின் பின்புலத்தை பார்த்து விடுவோம்.

1858 முதல் ஆங்கிலேய ராணுவத்தில் பணியாற்றியவர் ,1890-1896 வரை பொதுப் பணித்துறையில் பணியாற்றும் போது அவருக்கு  , மேற்கே அரபிக் கடலில் கலந்து வீணாகும் மழை நீரை கிழக்கே இருக்கும் தேனி, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை  போன்ற ஊர்களுக்கு பாய்ச்சினால் குடிநீர் பஞ்சம் தீரும், தரிசு நிலங்கள் விவசாய நிலங்களாக மாறும் என எண்ணம் விதையாய் விழுகிறது. அதற்கு ஒர் அணை கட்ட வேண்டும். அணை கட்டி, அதனை ராட்சத குழாய்கள் மூலம் இணைத்து தண்ணீர் பாச்ச முடியும். இதற்கான அனுமதியுடன் தலைமைப் பொறியாளராக தனது சக ஆங்கிலேயே பொறியாளர்களுடன் வன விலங்குகள், கொடிய பூச்சிகள் நிறைந்த வனப்பகுதியில் அணை கட்ட ஆரம்பிக்கிறார். மிகவும் கடினப்பட்டுக் கட்டிய மணல் மூட்டைகளை வைத்து நிரப்பிய தடுப்பணை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகிறது. இவ்வாறான இக்கட்டான நிலையில், ஆங்கிலேய அரசு மேற்கொண்டு எதையும் அணைக்காக செலவு செய்ய முடியாது என முடிவெடுத்து அணை கட்டும் திட்டத்தை கைவிடுகிறது. ஆனால், மனம் தளராத அவர் தனது இங்கிலாந்து நாட்டிற்க்குச் சென்று, தன் மனைவியின் நகைகள், தனது சொத்துக்கள் அனைத்தையும் விற்று, அந்தப் பணத்தைகொண்டு ஒர் அணையைக் கட்டி முடிக்கிறார் எந்த ராஜவின், ஜமின்களின், திவான்களின் உதவியும் இல்லாமல். விளைவு, 2.33 லட்சம் ஏக்கர் தரிசு நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. கட்டப்பட்ட அந்த அணையின் பெயர் “முல்லைப் பெரியாறு” அணை, கட்டியவர் கலோனல் பென்னிகுயிக். கட்டி முடிக்கப்பட்ட ஆண்டு 1895. எளிதாக சொல்ல வேண்டுமானல் தென்தமிழகத்தின் குலசாமி.

images (10)

DSC_0894100_5508

கர்னல் பென்னிகுயிக் மற்றும் அவரின் மணிமண்டபம். 

உண்மைக்கதை இப்படி இருக்க, படத்தில் அணையை கட்டும் போது ஆங்கிலேயர்கள் எதிர்த்தார்கள் என வரலாற்றுப் புனைவை எப்படி படம் முழுவதும் சொல்ல முடிகிறது என்பது கே.ஸ். ரவிகுமார் மட்டுமே அறிவார்.

உலகிலேயே அணைக் கட்டுவது தான் சவால்கள் மற்றும் மிகக் கடினமான கட்டுமானப் பணி. இடத்தை அடைவதற்கே பெரும் போரட்டம் நடத்த வேண்டியிருக்கும். விசப் பூச்சிகளும், கொடிய வனவிலங்குகள், பனி, கடும் மழை,குளிர், நிலச் சரிவு, வெள்ளம் போன்றவற்றை சமாளிக்க வேண்டியிருக்கும். (2009ல் நான் பணிபுரிந்த போது ஒர் மலைப்பாப்பு, 2 சிறுத்தை குட்டிகளை வனத்துறையிடம் கொடுத்திருக்கிறோம், 17 வருடங்களாக ஒர் பாலத்தை பிரமபுத்திரா ஆற்றின் மேலே இன்னமும் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்). இடுபொருட்களை எடுத்துச் செல்ல பாதை இருக்காது , அப்படியே எடுத்துச் சென்று கட்டினாலும், தடுப்பணைகளை வெள்ள நீர் அடித்துச் சென்றுவிடும். நிலைமை இப்படி இருக்க, இங்கே ரஜினி சென்னையில் வீடு கட்டுவதைப் போல மிக எளிதாக கட்டுகிறார். ரஜினி படத்தில் லாஜிக் இருக்காது என்ற அடிப்படியியில் எல்லாவற்றையும் விட்டுவிட்டு வேண்டுமானல் படம் பார்க்கலாம்.

download 4

நிலச்சரிவு மற்றும் 17 வருடங்களாக கட்டும் பாலத்தின் தோற்றம் 

படத்தில் இரண்டு கதா நாயகிகள், ஒருவர் அனுஸ்கா, மற்றொருவர் சோனாக்சி . இருவருக்கும் போதுவான ஒர் ஒற்றுமை  வயதானது போல இருக்கும் அவர்களின் முகத் தோற்றம், ஒருவர், தொலைக்காட்சி நிருபர் எனச் சொல்லிவிட்டு ரஜினியின் பின்னாலயே சுற்றுகிறார், மற்றொருவர் ஊரே தண்ணிப் பஞ்சத்தில் இருக்கும் போது கணக்கு வாத்தியாரின் மேலே தண்ணீர் ஊற்ற திட்டம் போடுகிறார். ஆளுக்கொரு ஒரு டூயட் என்ற விதியைத் தாண்டி வேறு ஏதும் அழுத்தமாக பயன்படுத்தப் படவில்லை.

linga audio function images5

ராதரவி, விசுவநாதன், விஜய குமார், சுந்தர ராஜன் என மற்ற அனைவரும், அவரவர் பாத்திரங்களை செவ்வனே செய்திருக்கிறார்கள். ஆங்கிலேயர்கள் இங்கு இருக்கும் இனத் தூரோகிகள் மூலமாகவே 200 வருடங்கள் எவ்வித பிரச்சைனையும் இன்றி ஆண்டார்கள் என்பத்ற்கு சுந்தர்ராஜன் பாத்திரம் ஒர் உதாரணம். எந்தப் பேச்சின் மூலம் சந்தானம் பிரபலமடைந்தாரோ , அதே பேச்சை இந்தப் படத்திலும் தொடர்கிறார் நகைச்சுவை என்ற பெயரில், ஆனால், பாருங்கள் நமக்குத்தான் சிரிப்பே வரவில்லை.

வில்லன் மக்களைவை உறுப்பினரான ஜெகபதி பாபு, முழு நேரமும் அணையிலேயே இருக்கிறார், அதனை வெடிவைத்து தகர்க்க திட்டமிடுகிறார், தமிழக அரசின் தலைமைப் பொறியாளரைக் கொல்கிறார். ஆக மொத்ததில் இவருக்கும் கனமான பாத்திரப் படைப்பு இல்லை. படம் முழுதும் ஆக்கிரமித்துள்ளவர்கள் இருவர், ஒருவர் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு, மற்றொருவர் ஒப்பணைக்காரர், இன்னும் சொல்வதென்றால் படத்தின் பாதிச் செலவு ஒப்பணைக்கும், ஆடைகளுக்கும் செலவாகி இருக்க வேண்டும் . இருவருமே தங்களது அபரிமிதமான உழைப்பை வழங்கி உள்ளார்கள். மேலும், ரகுமானை எங்கு தேடியும் கிடைக்கவில்லை .

ரஜினி – கே.ஸ். ரவிக்குமார்  இருவரும் 1995 இல் இணைந்த முதல் படம் ”முத்து”. அதில், தனது சொத்துக்களை எல்லாம் மக்களுக்கும், தனது தங்கைக்கும் தானமாக கொடுத்து விடுவார் ரஜினி. இரண்டாம் படமான படையப்பா , படத்திலும், ரஜினியின் தந்தை சிவாஜி, தன் குடும்ம சொத்துக்களை இழந்து விடுவார். கிட்டத்தட்ட 20 வருடங்கள் கழித்து இப்போது எடுத்திருக்கும் லிங்கா படத்திலும் அதே டைலர், அதே வாடகை என்பது போல, அதே சொத்தை இழக்கும் கதை, கொஞச்ம் நிஜம், நிறைய வரலாற்றுப் புனைவுகள் இவற்றைச் சேர்த்து உருவாக்கிய படமே “லிங்கா”. மாற்றம் ஒன்று தான் மாறாதது என்று படத்துக்கு படம் பஞ்ச்சடிக்கும் ரஜினி படத்தின் கதையை மாற்றினால் நல்லது.

images (8)

இறுதியாக, 2000 காலகட்டத்தில் பார்த்த படங்களை நினைவில் கொண்டு வரமுடிந்தால், படத்தை எத்தணை முறை வேண்டுமானலும் பார்க்காலாம், இல்லையெனில் ஒரு முறைக்கு மேல் ரஜினி ரசிகர்களாலே பார்க்க முடியாது .

Leave a comment